Aththimaram Thulirvidaamal | அத்திமரம் துளிர்விடாமல்

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன்
கொடாமல் போனாலும்

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களிகூருவேன்

ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
வயல்களிலே தானியமின்றிப் போனாலும்

மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்
தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்

எல்லாமே எதிராக இருந்தாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்

உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
ஊரெல்லாம் என்னைத் தூற்றித் திரிந்தாலும்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS