Azhaginile Siranthavar Neer | அழகினிலே சிறந்தவர் நீர்

Loading

அழகினிலே சிறந்தவர் நீர்
அன்பு நிறைந்தவர் நீர்
அலைகள் மோதும் எனது வாழ்வில்
அமைதி ஈந்தவர் நீர்

இகத்திலே என் இதயம் கவர்ந்த
இதய தெய்வம் நீர்
இன்னல் மேவும் துன்ப நேரம்
இன்பம் ஈந்தவர் நீர்

பாவி எந்தன் பாவம் தீர்க்க
பாரில் பிறந்தவர் நீர்
பாவி எனக்காய் கோர குருசில்
பாடு சகித்தவர் நீர்

மாயை தனிலே மறந்து உம்மை நான்
மாளும் நேரமதே
மாற்றினீர் என் மனதை இறைவா
மாறின் கிருபையிதே

என்னை மீட்க எனது சாயல்
எடுத்த இறைவனே நீர்
என்னை உமது சாயல் தனிலே
என்றும் மாற்றிடுவீர்

உலகில் உன் சிலுவையிலே என்
உள்ளம் உருகிடுதே
உன்னதா நின் சிலுவைதனையே
உயர்த்துவேன் பூவிலே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS