fbpx

Azhaikkiraar Azhaikkiraar Itho | அழைக்கிறார் அழைக்கிறார் இதோ

பல்லவி
அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
நீயும் வா உந்தன் நேசர்
ஆவலாய் அழைக்கிறார் இதோ – நீயும்

பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்
கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியே
கண்டிடும் வேண்டிடும் பாவ பாரம் நீக்கிடும் – அழைக்கிறார்

நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர்
நீதிபரன் உன் நோயை நிச்சயமாய் தீர்த்தாரே
நோயுற்ற உன்னையே – நேயமாய் அழைக்கிறார் – அழைக்கிறார்

துன்பம் சகித்தவர் துயரடைந்தவர்
இன்னலுற்ற உன்னையே – அண்ணல் யேசழைக்கிறார்
துன்புறும் நெஞ்சமே – துரிதமாய் நீ வாராயோ – அழைக்கிறார்

அந்தக் கேடடைந்தார் அழகற்று தோன்றினார்
சொந்தமாக சேர்த்திட இந்தப்பாடடைந்தாரே
நிந்திக்கும் உன்னையும் சந்திப்பார் நீ வாராயோ – அழைக்கிறார்

கல்லறை திறக்க காவலர் நடுங்க
கஸ்திகளடைந்தாரே – கட்டுகளறுத்தாரே
உயிர்த்தார் ஜெயித்தார் – உண்டு மீட்புனக்குமே – அழைக்கிறார்

சாந்த சொரூபனே – சத்திய வாசனே
வஞ்சமற்ற வாயனே வந்தனைக்கும் நேயனே
தஞ்சமே தன்னையே – தந்துனையழைக்கிறார் – அழைக்கிறார்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS