Azhaikkiraar Iyaesu | அழைக்கிறார் இயேசு

அழைக்கிறார் இயேசு உன்னை யுத்தம் செய்ய
அழைக்கிறார்
அழைக்கிறார் மீட்பர் உன்னை இரத்தம் சிந்த
அழைக்கிறார்

மரணமோ ஜீவனோ, நாசமா மோசமோ
பட்டயமோ பட்டினியோ ஒன்றுஞ் செய்யாதே
துன்பமோ தொல்லையோ ஆளுகையோ, வல்லமையோ
நடப்பதோ வருவதோ அன்பை மாற்றாதே – அழைக்கிறார்

தலை முடிக்கு கணக்கு வைக்கும் தேவன் அவர்
கண்மணிபோல் கருத்துடனே காத்திடுவார்
இரத்தசாட்சி ஸ்தேவான் போல் உன்னை அவர்
முற்றும் மாற்ற இன்று உன்னை அழைக்கின்றார் – மரணமோ

திறப்பின் வாயில் நிற்கத்தக்க மனிதன் யார்
என்று தேடும் தேவனை நீ சந்திப்பாயா
என் காரியம் நிறைவேற செல்பவன் யார்
என்று கேட்கும் தேவன் உன்னை அழைக்கின்றார் – மரணமோ

நல்ல போர் சேவகனாய் தீங்கடைய
நல்ல ஓர் போராட்டம் நடத்தியே
ஓட்டம் முடித்து நற்பரிசாம் நித்தியா
ஜீவகிரீடம் பெற்றிடவே அழைக்கின்றார் – மரணமோ

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS