Balan Koduppeer | பலன் கொடுப்பீர்

பல்லவி
பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர்
பண்பட்ட நிலம் போல பலன் கொடுப்பீர்

அனுபல்லவி
வழியோரமா? (நான்) கற்பாறையா?
முள் புதரா? நான் நல்ல நிலமா?

இயேசுவின் வார்த்தை விதையாகும்
அறியா உள்ளம் வழியோரம்
பறவைகள் விரைந்தே தின்பது போல்
பகைவனாம் தீயோன் பறித்திடுவான் – பலன்

மண்ணிலா பாறை நிலமாகும்
மனதில் நிறையற்ற மனிதர்களே
வேரற்ற வாழ்க்கை வாழ்வதினால்
வெயிலால் வசனம் கருகி விடும் – பலன்

முட் செடி புதராம் மனுவுள்ளம்
முளைத்திடும் வசனம் நெறிந்திடவே
இறைவனின் வார்த்தை வளரவில்லை
இறுகியே ஆசைகள் கொன்றதினால் – பலன்

இயேசுவின் வார்த்தை உணர்ந்திடுவோர்
குறையில்லா பண்பட்ட நிலமாவார்
அறுபது முப்பது நூறு என்றே
அறுவடை எடுப்பார் வாழ்வினிலே – பலன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS