To Advertise Contact - christmusicindia@gmail.com

Bayappadaathe Siru Manthaiye | பயப்படாதே சிறு மந்தையே

Loading

பயப்படாதே சிறு மந்தையே
பரலோக இராஜ்ஜியம் உனக்குள்ளதே
தேடுங்கள் தேவனின் இராஜ்ஜியத்தை
கூடயாவும் கொடுப்பாரே பயப்படாதே

புசிப்பும் அல்ல குடிப்பும் அல்ல
தேவனின் இராஜ்ஜியமே
நீதி சமாதானம் நித்தியா சந்தோசம்
நிர்மலன் ஆவியாலே – பயப்படாதே

ஐசுவரியமுள்ளோர் அடைவது அரிது
ஆண்டவர் இராஜ்ஜியத்தில்
ஆசை எல்லாம் தியாகம் செய்தோர்
ஆளுவார் இயேசுவோடு – பயப்படாதே

கர்த்தாவே என்றும் கனியற்ற மனிதன்
காணான் இராஜ்ஜியத்தை
பிதாவின் சித்தம் நித்தமும் செய்தால்
சேரலாம் இராஜ்ஜியத்தில் – பயப்படாதே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS