To Advertise Contact - christmusicindia@gmail.com

Deva Aaseervaatham | தேவ ஆசீர்வாதம்

Loading

தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே
துதிகள் நடுவே கர்த்தர் தங்க
தூதர் சேனை தம் மகிமையோடிறங்க

சரணங்கள்
எழும்பு சீயோனே ஒழி வந்ததே
எறிந்திடும் விளக்கே திருச்சபையே
காரிருளே கடந்திடுதே
கர்த்தரின் பேரொளி வீசிடுதே – தேவ

நலமுடன் நம்மை இதுவரையும்
நிலை நிறுத்திடுதே அவர் கிருபை
கண்மணிபோல் கடைசி வரை
காத்திடும் பரமனை வாழ்ந்திடுவோம் – தேவ

குறித்திடும் வேளை உயர்த்திடுவார்
கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்தவரை
வாழ்வினில் துதித்திட வாய்திறப்போம் – தேவ

தெரிந்தெடுத்தார் தம் மகிமைக்கென்றே
பரிந்துரைத்திடுவார் நாம் பிழைத்திடுவோம்
இரட்சிப்பினால் அலங்கரித்தார்
இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம் – தேவ

பெருந்தொனி கேட்க ஏறிடுவோம்
பரலோகத் திறந்தே அவர் வருவார்
உள்ளத்தில் உயர் ஸ்தலத்தில்
என்றென்றும் அவருடன் வாழ்ந்திடுவோம் – தேவ

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS