To Advertise Contact - christmusicindia@gmail.com

Deva Devan Baalaganaay | தேவ தேவன் பாலகனாய்

Loading

தேவ தேவன் பாலகனாய்
தேவ லோகம் துறந்தவராய்
மானிடரின் சாபம் நீங்க
மாநிலத்தில் அவதரித்தார்

அல்லேலூயா!! அல்லேலூயா!!
அற்புத பாலகன் இயேசுவுக்கே

பரம சேனை இரவில் தோன்றி
பாரில் பாடி மகிழ்ந்திடவே
ஆ நிரையின் குடில் சிறக்க
ஆதவனாய் உதித்தனரே – அல்லேலூயா

ஆயர் மனது அதிசயிக்க
பேயின் உள்ளம் நடுநடுங்க
தாயினும் மேல் அன்புள்ளவராய்
தயாபரன் தான் அவதரித்தார் – அல்லேலூயா

லோகப் பாவம் சுமப்பதற்கோ
தாகம் தீர்க்கும் ஜீவ ஊற்றே
வேதம் நிறை வேற்றுதற்கோ
ஆதியாக அவதரித்தார் – அல்லேலூயா

தாரகையாய் விளங்கிடவோ
பாரில் என்னை நடத்திடவோ
ஆருமில்லா என்னைத் தேடி
அண்ணலே நீர் ஆதரித்தீர் – அல்லேலூயா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS