To Advertise Contact - christmusicindia@gmail.com

Deva Devanaith Thuthiththiduvom | தேவ தேவனைத் துதித்திடுவோம்

Loading

தேவ தேவனைத் துதித்திடுவோம்
சபையில் தேவன் எழுந்தருள
ஒரு மனதோடு அவர் நாமத்தை
துதிகள் செலுத்தி போற்றிடுவோம்

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா பரிசுத்தருக்கே
அல்லேலூயா இராஜனுக்கே

எங்கள் காலடி வழுவிடாமல்
எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்
கண்மணி போலக் காத்தருளும்
கிருபையால் தினம் வழிநடத்தும் – அல்லேலூயா

சபையில் உம்மை அழித்திடுவோம்
சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம்
சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம்
சாகும் வரையில் உழைத்திடுவோம் – அல்லேலூயா

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை தொடர்ந்திடவே
வேத வசனம் கீழ்படிவோம்
தேவ சாயலாய் மாறிடுவோம் – அல்லேலூயா

வானத்தில் அடையாளம் தோன்றிடுமே
இயேசு மேகத்தில் வந்திடுவார்
நாமும் அவருடன் சேர்ந்திடவே
நம்மை ஆயத்தமாக்கிக் கொள்வோம் – அல்லேலூயா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS