Deva Ekkaalam Muzhangidumae | தேவ எக்காளம் முழங்கிடுமே

பல்லவி
தேவ எக்காளம் முழங்கிடுமே
தேவ தாசர் பறந்து செல்வோமே

சரணங்கள்
அன்பர் ஏசு வந்திடும் நாளே
ஆவலோடு காத்திருந்தாலோ
அற்ப சரீரம் தேவ செயலாலே
ஆண்டவர் திருச்சாயலாகும்
அடையும் மறுரூபமே – தேவ

சர்வசிருஷ்டி ஏகம் தவித்தே
சுயாதீனத்தை சுதந்தரிக்கும்
சரீர மீட்பை பெறுவதற்காக
சோராமல் தவிக்கிறோம் நாமும்
ஜெயிக்கும் தேவ புத்திரர் – தேவ

லோத்தின் நாட்கள் நோவா காலம் போல்
லோகம் எல்லாம் சீரழிந்தாலும்
விக்கினங்கள் ஆபத்து நேரிட்டாலும்
இக்கட்டில் நம்மை கைவிடாரே
திக்கற்றோர் துணை இயேசுவே – தேவ

இன்று நாமோ தேவ பிள்ளைகள்
அன்றவர்க்கே ஒப்பாயிருப்போம்
அவர் மேல் இந்த நம்பிக்கை உள்ளோரே
அவர் போல் பரிசுத்தமாக
அவரோடிணைந்திருப்போம் – தேவ

தேவன் தாமே கட்டி உண்டாக்கும்
தூய சாலோம் மாளிகையாகும்
பொன் மகிமை அம்பரஸ்தலம் சேர்வோம்
பயணம் முடித்திடும் வேகம்
பறந்து வானில் மறைவோம் – தேவ