To Advertise Contact - christmusicindia@gmail.com

Deva Janame Unnai | தேவ ஜனமே உன்னை

Loading

தேவ ஜனமே உன்னைக் காக்கிறார்
தேவ நீதியை உன்னில் காண்கிறார்
இப்போதும் எப்போதும் கீதம் பாடுவோம்
எக்காலம் மாறாதவர் நமது சொந்தம்

தலைமுறை தலைமுறையாய்
நீர் அடைக்க்கலாமானவரே
துணையில்லா மனிதருக்கு
நல்ல மறைவான கேடகமே
மனதின் பாரம் சுமைகள் தாங்கும்
மாறாத தேவனைப் போற்றிடுவோம் – தேவ

தினம் உந்தன் கிருபையினால்
எந்தன் மனதினை மகிழச் செய்தீர்
லீபனோனின் கேதுருபோல்
எந்தன் வாழ்க்கையை செழிக்கச் செய்தீர்
உணரும் இதயம் என்றும் தாரும்
உயர்த்தி உம்மை என்றும் பாடிடவே – தேவ

தேவனின் பரிசுத்தமே
உந்தன் ஆலய அலங்காரமே
துதித்திடும் கீதங்களே
தினம் எழும்பிடும் தூபங்களே
பணியைப் போல கிருபை இறங்கும்
மகிழ்ந்து பணிந்து துதித்திடுவோம் – தேவ

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS