To Advertise Contact - christmusicindia@gmail.com

Deva Samaathaanam | தேவ சமாதானம்

Loading

தேவ சமாதானம் கிருபையே
தேவ சந்தோஷமும் நிறைவாயே
தேவாசீர்வாதங்கள் தங்கிடவே
தேவன் அருள் ஈவாரே

சரணங்கள்

ஆணி கடாவின கரமதே
அன்புடன் உன்னை அணைக்கிறதே
வல்லமை உன்மீதில் பாய்ந்திடவே கர்த்தர்
வலக்கை நீட்டுகின்றார் – தேவ

இத்தனை ஆண்டுகள் சுமந்தாரே
இன்றைக்கும் உன் ஏசு மாறிடாரே
கலங்காதே திகையாதே என் உள்ளமே
கர்த்தர் துணை நிற்கிறார் – தேவ

தேவ சித்தம் என்றும் செய்திடுவாய்
தேவ குமாரன் உன்னோடிருப்பார்
உன் மேல் தன் கண் வைத்து ஆலோசனை தந்து
உன்னை நடத்திடுவார் – தேவ

கன்மலை மேல் வீட்டைக் கட்டுவாயே
கர்த்தரின் கற்பனை கைக்கொள்வாயே
உத்தம சாட்சியாய் நின்றிலங்குவாயே
ஊழியம் செய்குவாயே – தேவ

நல்ல தீர்க்காயுள் பெருகிடவே
நித்திய ஜீவனும் பெற்றிடவே
பக்தர்கள் பந்தியில் பங்கடைந்திடவே
பரன் தயை புரிவார் – தேவ

வாழ் நாளெல்லாம் களிகூர்ந்திடவே
வாடாத கிருபை ஈந்திடுமே
கிருபை கிருபை என்றென்று முள்ளதே
கர்த்தனை வாழ்த்திடுவோம் – தேவ

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS