To Advertise Contact - christmusicindia@gmail.com

Devaa Ennai Aaseervathiyum | தேவா என்னை ஆசீர்வதியும்

Loading

தேவா என்னை ஆசீர்வதியும்
எல்லையை பெரிதாக்கும்
உமது கரமே என்னுடனிருந்து
எல்லா தீங்குக்கும் விலக்கிடும்
தேவனே இயேசுவே தேவனே இயேசு தேவா

தாகம் தீர்க்கும் தண்ணீரையும்
வறட்சி நீக்கும் ஆறுகளும்
தேவஜனத்தில் ஆவியையும்
இன்று பலமாய் ஊற்றிடும்

தேவ சபையில் எழுந்தருளி
மகிமை பொழிந்திடுவீர்
மகிழ்ச்சி பொங்க பாடிடும் மக்கள்
மனதில் நிறைந்திடுவீர்

இரட்சிப்பின் மதில்கள் உயர்ந்திட
வாசல்கள் துதியால் நிறைந்திடும்
ஊழிய எல்லையை நீர் விரித்து
எந்நாளும் சேவையில் கலந்திடும் – தேவ சபையில்

என்றென்றும் இயேசுவின் கரத்தினால்
அன்றன்று தேவையைப் பெற்றிடுவேன்
ஒன்றுக்குமே இனி குறைவில்லை
சொந்தமாய் உம்மை சார்ந்திடுவேன் – தேவ சபையில்

தெய்வீக வாசனை சாட்சிக்கே
தீங்கை முற்றிலும் நீக்கிடுமே
ஆவியும் அருளும் தங்கிடவே
ஞானத்தின் அறிவு பெற்றிடுவேன் – தேவ சபையில்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS