To Advertise Contact - christmusicindia@gmail.com

Devaa Naan Ethinaal | தேவா நான் எதினால்

Loading

தேவா நான் எதினால் விசேஷித்தவன்
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
எதினால் இது எதினால்
நீர் என்னோடு வருவதினால் (இருப்பதினால்)

மேகஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதை காட்ட பகலெல்லாம் கூட செல்லுது
அன்பான தேவன் என்னோடு வருவார்
அதுபோதும் என் வாழ்விலே

தாகம் கொண்ட தேவஜனம் வானம் பாக்குது
ஆவல் கொண்ட கன்மலையும் கூட செல்லுது
என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன்

வாழ்க்கையில் கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒரு மரம் கூட வருகுது
மாராவின் நீரை தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடு உண்டு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS