To Advertise Contact - christmusicindia@gmail.com

Devaa Pirasannam Thaarumae | தேவா பிரசன்னம் தாருமே

Loading

பல்லவி
தேவா பிரசன்னம் தாருமே
தேடி உம்பாதம் தொழுகிறோம்

அனுபல்லவி
இயேசுவே உம் திவ்ய நாமத்திலே
இன்பமுடன் கூடி வந்தோமே

சரணங்கள்
வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதஸ்தலம்
பணிந்து குனிந்து தொழுகிறோம்
கனிந்தெம்மை கண்பாருமே – தேவா

சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
சாந்த சொரூபி என் இயேசுவே
ஆயிரம் பேரிலும் சிறந்தோராம்
ஆண்டவரைத் தொழுகிறோம் – தேவா

கர்த்தர் செய்த உபகாரங்கள்
கணக்குரைத்து எண்ணலாகுமோ
இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகரைத் தொழுகிறோம் – தேவா

கர்த்தர் சமூகம் ஆனந்தமே
பக்தர் சபையில் பேரின்பமே
கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்
சுத்தர்கள் போற்றும் தேவனே – தேவா

நூற்றிருபது பேர் நடுவே
தேற்றவாளனே வந்தீரே
உன்னத ஆவியை ஊற்றிடுமே
மன்னவனே இந்நேரமே – தேவா

எப்போ வருவீர் என் இயேசுவே
ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே
பறந்து விரைந்து தீவிரமே
இறங்கி வாரும் இயேசுவே – தேவா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS