Devakumara devakumara – Pr.Y Wesley – Lyrics

Loading

தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க
என்ன கொஞ்சம் நினைச்சிடுங்க
தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க
என்ன கொஞ்சம் நினைச்சிடுங்க
நீங்க நினைச்சா ஆசீர்வாதம்தான்
என்ன மறந்தா எங்கே போவேன் நான்

1. உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும்
உம்மை மறுதளித்தவன் நான் என் உலகே அறியும்
உதவாது என் நீதி உதவாது நீங்க இல்லாம என் பொழுதும் விடியாது

2. பிழைக்க தெரியாதவன் நான் அது உமக்கே தெரியும்
எதற்கும் உதவாதவன் நான் என் உறவே அறியும்
உதவாது என் நீதி உதவாது நீங்க இல்லாம என் உலகம் இனிக்காது

3. உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும்
தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும்
உதவாது என் நீதி உதவாது நீங்க இல்லாம என் இதயம் இயங்காது

error: Content is protected !!
ADS
ADS
ADS