தேவனை உயர்த்தித் துதியுங்கள்
அவர் நாமத்தைப் போற்றியே
தேவனின் செயல் அதிசயமென்று
அதிசயமென்று சொல்லி
கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும்
திட பலனும் ஏழைக்கடைக்கலமுமானார்
படும் பலவந்தர் ஆரவாரமென்றும்
ஆரவாரம் என்றுமே – தேவனை
இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார்
இவரின் இரட்சிப்பினால் களி கூர்ந்திடுவோம்
இவர் பகைவனை வென்று கீழ்ப்படுத்தி
வென்று கீழ்ப்படுத்தினார் – தேவனை
கர்த்தரையே நம்பி சத்தியம் கைக் கொண்ட
உத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள்
பக்தருக் கென்று பலத்த நகரம்
பலத்த நகரம் உண்டு – தேவனை
அன்னியர் ஆள்வதில்லை இந்நிலம் தன்னில் நம்மை
மன்னாதி மன்னனே நம் மகிபனாயிருப்பார்
மன்னரும் தேவ சமாதானந் தங்கும்
சமாதானம் தங்கிடுமே – தேவனை
புனிதராய் மரித்தோர் பூரித்தெழும்புவார்
பனிபோல் கிருபையை பக்தரின் மேல் பொழிவார்
இனி உலகத்தில் இன்னல் பெருகிடும்
இன்னல் பெருகிடுமே – தேவனை
மறைவிடமுமுண்டு மன்னனின் ஜனத்திற்கே
குறை விசாரிக்கும் கோபத்தின் நாளிலே
அறைக்குள் மறைந்து ஆனந்திக்கும் சபை
ஆனந்திக்கும் சபையே – தேவனை
சிறந்த விருந்தொன்று சீயோன் மலையின் மீது
அருந்த யாவருக்கும் ஆயத்தமாக்குவார்
நிந்தையை நீக்கிக் கண்ணீரைத் துடைத்துக்
கண்ணீரைத் துடைத்திடுவார் – தேவனை