To Advertise Contact - christmusicindia@gmail.com

Devanukkae Magimai | தேவனுக்கே மகிமை

Loading

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை – ஐயா
வாழ்க வாழ்க உம நாமம் வாழ்க

உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும் – இந்தப்
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும்       – ஐயா

செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம சித்தம் – இந்தப்
புவிதனிலே உம விருப்பம்
பூரணமாகட்டுமே                   – ஐயா

எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே – எங்கள்
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே         – ஐயா

தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும்  – இன்று
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே          – ஐயா

குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே – பாவக்
கரை போக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே             –  ஐயா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS