Devareerukke Miga | தேவரீருக்கே மிக

Loading

தேவரீருக்கே மிக ஸ்தோத்திரம் மிக ஸ்தோத்திரம்

எய்திடும் துன்பம் எத்தனை யுண்டதர்
கெல்லாம் விலக்கினையே
இயேசக் கிறிஸ்துவின் நாமத்தினா லெங்கள்
ஏதும் போக்கினையே – தேவரீருக்கே

எங்களின் தேகம் எங்களின் ஆவியும்
எல்லாம் உமதன்றோ? இவை
எல்லாம் படைத்தேன் ஏற்றுக் கொள்ளுமேன்
எல்லாம் உமக்கென்றே – தேவரீருக்கே

உந்தன் நாமம் பரிசுத்தப்படுக
உம் இராஜ்ஜியம் வருக
உம் சித்தம் பரலோகம் போல
உலகில் செய்யப்படுக – தேவரீருக்கே

இராஜ்ஜியம் வல்லமை மகிமையும் கனமும்
உமக்கே உடைமையே இவ்
வெளியார்க்குந்தன் அருளைத் தந்து
ஆசீர் வதித்தருளும் – தேவரீருக்கே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS