Devathi Devan | தேவாதி தேவன்

Loading

தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
வாழ்க வாழ்கவே
கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன்
வாழ்க வாழ்கவே

மகிமை உமக்குத்தான்
மாட்சிமை உமக்குத்தான்
மகிமை உமக்குத்தான்
மாட்சிமை அதுவும் உமக்குத்தான்

திசை தெரியாமல் ஓடி
அலைந்தேன் தேடி வந்தீரே
சிலுவையில் தொங்கி இரத்தம் சிந்தி
இரட்சித்து அணைத்தீரே

எத்தனை நன்மை எனக்கு செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன்
வாழ்நாளெல்லாம் உமாக்காய்  வாழ்ந்து
உம் பணி செய்திடுவேன்

சோதனை நேரம் வேதனை வேளை
துதிக்க வைத்தீரே
எதிராய் பேசும் இதயங்களை
நேசிக்க வைத்தீரே

வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
அதிகமாய் செய்பவரே
மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்து
அணைத்து மகிழ்பவரே

உளையான சேற்றில் வாழ்ந்த
என்னை தூக்கி எடுத்தீரே
கன்மலையின் மேல்நிறுத்தி – என்னை
பாட வைத்தீரே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS