Ekkaalam Oothiduvom | எக்காளம் ஊதிடுவோம்

எக்காளம் ஊதிடுவோம்
எரிகோவை தகர்த்திடுவோம்
கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
கல்வாரிக் கோடி ஏற்றுவோம்

கிதியோன்களே புறப்படுங்கள்
எதிரிகளை துரத்திடுங்கள்
தீபங்களை ஏந்திடுங்கள்
தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள்

சிம்சோன்களே எழும்பிடுங்கள்
வல்லமையால் நிரம்பிடுங்கள்
சீறிவரும் சிங்கங்களை
சிறைபிடித்து கிழித்திடுங்கள்

தெபோராக்களே எழும்பிடுங்கள்
உபவாசித்து ஜெபித்திடுங்கள்
எஸ்தர்களே கூடிடுங்கள்
இரவுகளை பகலாக்குங்கள்

அதிகாலையில் காத்திருப்போம்
அபிஷேகத்தால் நிரம்பிடுவோம்
கழுகு போல பெலனடைந்து
கர்த்தருக்காய் பறந்திடுவோம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS