எக்காலத்தும் என் கர்த்தரைத் துதிப்பேன்
எப்பொழுதும் என் நேசரில் மகிழ்வேன்
அவர் போதுமே என் துணையானவர்
குறைவெல்லாம் என்றும் நிறைவாக்குவார்
பாவங்கள் போக்கி நம் நோய்களைத் தீர்த்தவர்
பிராணனை அழிவுக்கு விலக்கியே மீட்டவர்
கிருபையும் இரக்கமும் கிடைத்திடச் செய்திடவர்
காத்திடுவார் இன்னமும் கர்த்தரை துதிப்பேன் – எக்காலத்தும்
யோபுவைப் போல் உந்தன் நிலைமைகள் வந்தாலும்
ஆபகூக்கைப் போல் ஆர்ப்பரித்திடுவாய்
கொடுத்தவர் எடுத்தார் கொண்டு வந்ததில்லை
குறைவுள்ள மனிதன் முறையிடுவானேன் – எக்காலத்தும்
என் நெஞ்சமே நீ ஏன் கலங்குகின்றாய்
இன்னமும் துதித்தே இன்னலைச் சகிப்பாய்
ஏன் என்று கேட்கும் இதயமே வேண்டாம்
எதையுமே தாங்கும் இதயமே தாரும் – எக்காலத்தும்
கர்த்தரை நம்பி கருத்துடன் ஜெபித்திடு
கஷ்டங்கள் நஷ்டங்கள் நன்மைக்கென்றெண்ணிடு
கடைசி மட்டும் அதில் உண்மையாய்
வாழ்ந்திடு கர்த்தரே வருவார் கனிவுடன் சேர்ப்பார் – எக்காலத்தும்