EKKAALMUM STHOTHARIPPAEN (OFFICIAL VIDEO) || JOHNSAM JOYSON || NEW SONG – Lyrics

எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
எந்நேரமும் துதித்திடுவேன்
என்னை தாழ்த்தி பணிந்திடுவேன்
உம் நாமம் உயர்த்துவேன்
உம்மை பாடி மகிழுவேன்-2

நீர் செய்ததை மறக்க கூடுமோ?
இந்த வாழ்க்கை நீர் தந்ததே-2
உம்மை ருசித்தேன் நல்லவர் என்று
இன்னும் துதிப்பேன் நன்றியோடு-2

1.காலங்கள் கடந்து போனதே
உம் கிருபை என்னை நிறுத்துதே-2
இக்கட்டுக்கெல்லாம் விலக்கி
உந்தன் மறைவில் வைத்தீரே-2-நீர் செய்ததை

2.தேவைகள் என்னை சூழ்ந்ததே
உம் கரங்கள் எல்லாம் தந்ததே-2
எட்டாததை என் கையில்
எடுத்து தந்தீர் இயேசுவே-2-நீர் செய்ததை

error: Content is protected !!
ADS
ADS
ADS