To Advertise Contact - christmusicindia@gmail.com

Ellaam Yesuve Enakkellaam | எல்லாம் யேசுவே எனக்கெல்லாம்

Loading

பல்லவி
எல்லாம் யேசுவே எனக்கெல்லாம் யேசுவே
தொல்லை மிகு மிவ்வுலகில் எல்லாம் யேசுவே

சரணங்கள்
ஆயனும் சகாயனும் நேயனுமுபாயனும்
நாயனும் எனக்கன்பான ஞானமணவாளனும்

தந்தை தாயினம் ஜனம் பந்துள்ளோர் சிநேகிதர்
சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும்

கவலையிலாறுதலும் கங்குலிலென் ஜோதியும்
கஷ்ட நோயப் படுக்கையிலே கை கண்ட ஔஷதமும்

போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும்

அணியு மாபரணமும் ஆஸ்தியும் சம்பாத்தியமும்
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்

ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்
ஞான கீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS