Ellaarukkum Maa Unnathar | எல்லாருக்கும் மா உன்னதர்

எல்லோருக்கும் மா உன்னதர்
கர்த்தாதி கர்த்தரே
மெய்யான தெய்வ மனிதர்
நீர் வாழ்க இயேசுவே

விண்ணில் பிரதானியான நீர்
பகைஞர்க் காகவே
மண்ணில் இறங்கி மரித்தீர்
நீர் வாழ்க இயேசுவே

பிசாசு பாவ உலகை
உம் சாவால் மிதித்தே
ஜெயித்தடைந்தீர் வெற்றியை
நீர் வாழ்க இயேசுவே

நீர் வென்றபடி நாங்களும்
வென்றேறிப் போகவே
பரத்தில் செங்கோல் செலுத்தும்
நீர் வாழ்க இயேசுவே

விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்
என்றைக்கும் வாழவே
பரம வாசல் திறந்தோர்
நீர் வாழ்க இயேசுவே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS