En Aathma Nesa | என் ஆத்ம நேச

என் ஆத்ம நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மை கிட்டிச் சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்

பல்லவி
பேசும் பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது
ஆண்டவா பிரியமானதை
இப்போ காட்டும் செய்ய ஆயத்தம்

மெய் மீட்பருக்கு கீழ்ப்படிவோர்
தம் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்
அடியேனும் பெற அருள்வீர்
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் – பேசும்

பாவிகட்கு உமது அன்பை
என் நடையார் காட்டச் செய்யும்
கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப்
போரில் வெல்ல அபிஷேகியும் – பேசும்

என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையில் செல்லுவேன்
ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
மீட்பரே வல்லமை தந்திடும் – பேசும்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS