fbpx

En Aaththumaavum Sareeramum | என் ஆத்துமாவும் சரீரமும்

என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்
இனி வாழ்வது நானல்ல
என்னில் இயேசு வாழ்கின்றார்

இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன்
ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும்

அப்பா உம திருசித்தம் – என்
அன்றாட உணவையா
நான் தப்பாமல் உம் பாதம்
தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்

கர்த்தாவே உம் கரத்தில்
நான் களிமண் போலானேன்
உந்தன் இஷ்டம் போல் வனைந்திடும்
என்னை எந்நாளும் நடத்திடும்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS