என் பெலனாகிய கர்த்தாவே
உம்மை நான் நேசிக்கிறேன்
எந்தன் நெருக்கத்திலே என் சத்தமதை
நீர் கேட்டுப் பதிலளித்தீர்
என் கன்மலையும் என் கோட்டையும்
என் இரட்சகரும் என் தேவனும் நீர்
நான் நம்பிடும் என் துருகமே
எந்தன் இரட்சண்ய கொம்பும் நீரே
சிறுமைப்படும் மனிதனே கலங்கிடாதே
சீக்கிரம் நம் இயேசு வந்திடுவார்
மேட்டிமை மனிதர்க்கு நீ பயந்திடாதே
மேசியா என்றும் துணையானதால்
இரட்சிப்பின் கேடகம் எனக்குத் தந்தீர்
நீதி என்னும் சால்வையை உடுத்துவித்தீர்
கர்த்தர் பெலத்தால் மதிலைத் தாண்டிடுவேன்
அவர் வலக்கரம் என்னைத் தாங்கிடுமே