En Devanae | என் தேவனே

பல்லவி
என் தேவனே உம்மை உயர்த்திடுவேனே
உம் நாமத்தை என்றும் துதித்திடுவேனே

சரணங்கள்
ஏழைக்கு பெலனான கர்த்தர் நீரே
எளியவனுக்குத் திடனான தேவன் நீரே
பேரு வெள்ளத்தில் தப்பிக்கொள்ள அடைக்கலம் நீரே
வெயிலுக்கு ஒதுங்கிக் கொள்ள நிழலானோர் நீர் – என்

மரணத்தை ஜெயமாக விழுங்கினீரே
மானிடரின் கண்ணீரைத் துடைப்பவரே
நம்பினோனின் நின்தைகளை நீக்குபவரே
நித்தம் நித்தம் அதிசயங்கள் செய்பவர் நீரே – என்

உமக்காக என்னை உருவாக்கினீரே
உதிர கிரயம் ஈந்து என்னை மீட்டவரே
பெயரை சொல்லி பூர்ணமாய் அழைத்துக் கொண்டீரே
புதியதொன்று என்னிலே செய்திட நீரே – என்

கல்விமானின் நாவை எனக்குத் தருபவரே
காலைதோறும் கற்றுக் கொள்ள செய்பவரே
நீதியின் கரத்தால் என்னைத் தாங்குபவரே
நித்திய நித்திய வெளிச்சமாக இருப்பவர் நீரே – என்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS