என் தேவனே என் அப்பனே என் இருதயம் உம்மை துதிக்கும்
கர்த்தாவே மகிமையாய் கீர்த்தனம் பண்ணி உம்மை தோத்தரித்து
உண்மையின் நிமித்தம் கிருபையினிமித்தம் உந்தனின் நாமத்தை துதிப்பேன்
பல்லவி
உம் வார்த்தையை என்றும் மகிமை படுத்தினீர்
உம் நாமத்தை என்றும் உயர்த்தி கூறுவேன்
நான் கூப்பிட்ட அந்நாளிலே எனக்கு உத்தரவருளினீர்
ஆத்துமாவில் பெலன் தந்து என்னை தைரியப்படுத்தினீர்
உமது வார்த்தை கேட்கும் போது ராஜாக்கள் உம்மை துதிப்பார்கள்
கர்த்தரின் மகிமை பெரிதாயிருப்பதால் கர்த்தரின் வழியை பாடுவார்கள் – உம்
நீர் உயர்ந்தவராயினும் தாழ்மையுள்ளவனை நோக்குகின்றீர்
மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகின்றீர்
துன்பத்தின் நடுவில் நடந்தாலும் தேவனே என்னை உயிர்ப்பிப்பீர்
சத்துருவின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர் – உம்
எனக்காக யாவற்றையும் இரட்சிப்பின் கர்த்தர் செய்து முடிப்பார்
கர்த்தாவே உம் கிருபை என்றென்றும் முள்ளதால் ஸ்தோத்தரிப்பேன்
வலது கரத்தால் இரட்சிப்பீர் நேசரே உம்மை போற்றுகிறேன்
உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக – உம்