En Devane Ummai | என் தேவனே உம்மை

Loading

பல்லவி
என் தேவனே உம்மை உயர்த்திடுவேனே
உம் நாமத்தை என்றும் துதித்திடுவேனே

சரணங்கள்
ஏழைக்கு பெலனான கர்த்தர் நீரே
எளியனுக்குத் திடனான தேவன் நீரே
பெரு வெள்ளத்தில் தப்பிக்கொள்ள அடைக்கலம் நீரே
வெயிலுக்கு ஒதுங்கிக் கொள்ள நிழலானோர் நீர் – என்

மரணத்தை ஜெயமாக விழுங்கினீரே
மானிடரின் கண்ணீரைத் துடைப்பவரே
நம்பிநோனின் நின்தைகளை நீக்குபவரே
நித்தம் நித்தம் அதிசயங்கள் செய்பவர் நீரே – என்

உமக்காக என்னை உருவாக்கினீரே
உத்திர கிரயம் ஈந்து என்னை மீட்டவரே
பெயரை சொல்லி பூர்ணமாய் அழைத்துக் கொண்டீரே
புதியதொன்று என்னிலே செய்திட நீரே – என்

கல்விமானின் நாவை எனக்குத் தருபவரே
காலைதோறும் கற்றுக் கொள்ள செய்பவரே
நீதியின் கரத்தால் என்னைத் தாங்குபவரே
நித்தியா நித்தியா வெளிச்சமாக இருப்பவர் நீரே – என்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS