En Idhayam | என் இதயம்

Loading

என் இதயம் யாருக்குத் தெரியும்
என் வேதனை யாருக்குப் புரியும்
என் தனிமை, என் சோர்வுகள்
யார் என்னை தேற்றக்கூடும்

நெஞ்சில் ரோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள் (2)
தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே (2)

சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ (2)
வீசும் புயலில் படகும் தப்புமோ (2)

மங்கி எரியும் விளக்கு பெரும் காற்றில் நிலைக்குமோ (2)
உடைந்த உள்ளமும் ஒன்றாய் சேருமோ (2)

அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ
இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே (2)

என் இதயம் இயேசுவுக்குத் தெரியும்
என் வேதனை இயேசுவுக்கு புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
இயேசு என்னை தேற்றுவார் (2)

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS