En Iyaesu Raja | என் இயேசு ராஜா

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே (2)
உயிருள்ள நாளெல்லாமே

இரக்கம் உள்ளவரே
மனதுருக்கம் உடையவரே
நீடிய, சாந்தம், பொறுமை, அன்பு
நிறைந்து வாழ்பவரே

துதி கன மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம்
மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி
ஆராதனை செய்கிறோம்

கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே
உண்மையாய் கூப்பிடும்
குரல்தனை கேட்டு
விடுதலை தருபவரே

உலகத் தோற்ற முதல்
எனக்காய் அடிக்கப்பட்டீர்
துரோகியாய் வாழ்ந்த என்னையும் – மீட்டு
புதுவாழ்வு தந்து விட்டீர்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS