En Iyesu Rajan | என் இயேசு ராஜன்

Loading

என் இயேசு ராஜன் வருவார்
எண்ணிலடங்கா தூதரோடு
என்னை மீட்ட இயேசு ராஜன்
என்னை ஆளவே வருவார்

அவர் வருகையை எதிர்பார்க்கும் பக்தருக்கு
அவர் வருகை மிகப் பெரும் மகிழ்ச்சி
அவர் வருகையை எதிர் பாரா மாந்தர்க்கு
அவர் வருகை மிகப் பெரும் அதிர்ச்சி

உலகில் நடப்பவை எல்லாம்
அவர் வருகையின் உண்மையை கூறும்
அவர் வருகை மிகவும் சமீபம்
அவர் வரவை சந்திக்க ஆயத்தமா?

வானில் ஓர் பேரொளி தோன்றும்
விண்ணில் ஓர் மின்னொளி தோன்றும்
மேற்கும் கிழக்கும் நடுங்க
மேகங்கள் மீதே வருவார்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS