En Iyesuve Naan | என் இயேசுவே நான்

Loading

என் இயேசுவே நான் என்றும்
உந்தன் சொந்தம்
என் ராஜனே அநுதினமும்
வழி நடத்தும்

உலையான சேற்றினின்றே
தூக்கியே நிருத்தினீரே
உந்தனை நான் மறவேன்
உந்தனை போற்றிடுவேன்

அலைந்தோடும் கடல்தனை
அடக்கியே அமர்த்தினீரே
வார்த்தையின் வல்லமையை
என்றுமே காணச் செய்யும்

தாயினும் அன்புவைத்தே
தாங்கியே காப்பவரே
ஜீவிய காலமெல்லாம்
உந்தனை பின் செல்லுவேன்

அக்கினி சூளையிலே
நின்ற எம் மெய் தேவனே
விசுவாசம் திடமனதும்
என்றென்றும் தந்தருளும்

ஆகாரின் அழுகுரலை
அன்று நீர் கேட்டீரல்லோ
கருத்துடன் ஜெபித்ததுமே நான்
உந்தனைத் தேடுகிறேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS