To Advertise Contact - christmusicindia@gmail.com

En Iyesuve Ummai | என் இயேசுவே உம்மை

Loading

பல்லவி
என் ஏசுவே உம்மை அல்லால் மண்ணில் ஆறுதல்
ஒன்றும் கண்டிலேன்

சரணங்கள்
சுக செல்வா மகிமை பெருமையிலெங்கும்
இன்பம் தரும் பொருள் காணேன்
தாகம் பெருகும் தண்ணீர்ரேயன்றி
லோகம் வேறொன்றும் நல்காதே

ஆபத்துக் காலத்தில் அணுகூலமான
துணையும் நீர் பெலனுமே நாதா
ஆகையால் பூமி நிலை மாறினாலும்
அஞ்சேன் கடல் பொங்கினாலும்

பாழ் மணல் பாதையில் எரியும் வெயிலில்
பரனே உம் கிருபையின் நிழலில்
பாடி மகிழ்வேன் குருசில் புகழ்வேன்
பேரின்ப நாட்டில் நான் வாழ்வேன்

என் நேசர் இயேசுவில் நித்தமும் சார்ந்து
பரதேச யாத்திரை செய்வேன்
பாரினில் பொங்கும் துயரங்கள் தங்கும்
பாரங்கள் ஏதும் நானறிவேன்

உமதன்பின் இனிமையை என்றும் ருசிப்பேன்
உலகின் வினைகள் மறப்பேன்
உருகும் என் நெஞ்சம் அருளும் நல் தஞ்சம்
பெருகும் என் இதயத்தின் இன்பம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS