To Advertise Contact - christmusicindia@gmail.com

En Meetpar Sendra | என் மீட்பர் சென்ற

Loading

என் மீட்பர் சென்ற பாதையில்
நீ செல்ல ஆயத்தமா
கொல்கதா மலை வாதையில்
பங்கைப் பெறுவாயா

சிலுவையை நான் விடேன்
சிலுவையை நான் விடேன்

ஊரார் இனத்தார் மத்தியில்
துன்பம் சகிப்பாயா
மூர்க்கர் கோபிகள் நடுவில்
திடனாய் நிற்பாயா – சிலுவையை

தாகத்தாலும் பசியாலும்
தோய்ந்தாலும் நிற்பாயா
அவமானங்கள் வந்தாலும்
சிலுவை சுமப்பாயா – சிலுவையை

பாவாத்மாக்கள் குணப்பட
நீ தத்தம் செய்வாயா
கோழை நெஞ்சர் திடப்பட
மெய்யுத்தஞ் செய்வாயா – சிலுவையை

லோகத்தார் மாண்டு போகிறார்
மெய் வீரர் இல்லாமல்
பார் மீட்பர் ஜீவனை விட்டார்
தொங்கிச் சிலுவையில் – சிலுவையை

வாழ் நாளெல்லாம் நிலை நின்று
சிலுவையை சுமப்பேன்
தேவ அருளினால் வென்று
மேல் வீட்டைச் சேருவேன் – சிலுவையை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS