En Naesarukku | என் நேசருக்கு

என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்
பாசத்தோடு தினம் தினம் பாடுவேன்

ஆனந்தமே எந்நாளுமே
அப்பா உன் சமூகத்திலே

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்
குறை ஒன்றும் எனக்கு இல்லையே

புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
அமர்ந்த தண்ணீரண்டைசேர்க்கின்றீர்

புது உயிர் தினமும் தருகின்றீர்
ஆன்மாவைத் தேற்றி மகிழ்கின்றீர்

இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன்

நன்மையும் கிருபையும் தொடருமே
உயிரோடு வாழும் நாளெல்லாம்

நிலைத்திருப்பேன் உம் இல்லத்தில்
நித்திய நித்திய காலமாய்

என்னோடுகூட இருக்கின்றீர் – உம்
கோலும் தடியும் தேற்றுமே

எதிரிகள் கண்முன் விருந்தொன்று
ஏற்பாடு செய்கின்றீர் எனக்காய்

எண்ணெயால் அபிஷேகம் செய்கின்றீர்
பாத்திரம் நிரம்பி வழிகின்றது

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS