En Nesar | என் நேசர்

என் நேசர் என் ஆத்ம நாயகரே
வந்திடுவீர்
என் கண்ணீர் துடைத்திடவே
உம்மில் நான் சேர்ந்திடவே
என் இயேசுவே மத்ய வானில் வேகம்
வந்திடுவீர்

விண்மேகத்தில் தூத கணங்களுடன்
வரும் நேரம்
எனக்காய் காயப்பட்டதாம்
பொன்முகம் முத்தம் செய்திட
தண்ணீர் தேடும் மான்களைப்போல் நானும்
வாஞ்சிக்கிறேன்

வெண் வஸ்திரம் தரித்து உயிர்த்தெழுந்த
சுத்தருடன்
சேர்ந்து நின் சமூகத்திலே
அல்லேலூயா பாடிட
புத்தியுள்ள கண்ணிகைபோல் எப்போதும்
ஆயத்தமே

சூரிய சந்திர நட்சத்திரங்களை கடந்து
சொர்க்க வீட்டில்
பளிங்கு நதியோரத்தில்
ஜீவ விருட்சத்தின் நிழலில்
நித்தியா வீட்டில் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன்
என் நேசரே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS