EN YESUVAE – என் இயேசுவே| DAVIDSAM JOYSON | IMMANUEL JACOB

என் இயேசுவே என் நேசரே
நீர் செய்த நன்மைகள் ஏராளமே-2

நன்றியோடு உம்மை துதிக்கிறேன்
நாள்தோறும் உம்மை துதிக்கிறேன்-2
நீர் செய்த நன்மைகள் ஏராளமே
(என்னை) நடத்தின பாதைகள் அதிசயமே-2

1.தயங்கின போது உந்தனின் கிருபை
தாங்கினதை என்னில் உணர செய்தீர்
நெருக்கத்தின் போது உந்தனின் அன்பு
நெருக்கமானதை ருசிக்க செய்தீர்

தகப்பன் தன் பிள்ளையை சுமப்பது போல
இந்த நாள்வரையும் சுமந்து வந்தீர்-2-நன்றியோடு

2. உந்தனின் அன்பின் ஆழத்தை அறிய
உம் சமூகம் என்னை கொண்டு வந்தீர்
உந்தனின் மகிமை என்னிலே விளங்க
உம் ஆவியாலே என்னை நிறைத்தீர்

உந்தனின் வார்த்தையால் தினம் என்னை போஷித்து
உன்னத அனுபவம் எனக்கு தந்தீர்-2-நன்றியோடு

3. தாழ்விலே என்னை கண்ணோக்கி பார்த்து
தயவால் என்னை உயர்த்தி வைத்தீர்
தகுதியே இல்லா என் நிலை அறிந்து
நீரே தகுதியாய் எனக்காய் நின்றீர்

இன்று நான் காணும் மேன்மைகள் எல்லாம்
உந்தனின் கரங்களால் எனக்கு தந்தீர்-2-நன்றியோடு

error: Content is protected !!
ADS
ADS
ADS