To Advertise Contact - christmusicindia@gmail.com

Engal Devan | எங்கள் தேவன்

Loading

எங்கள் தேவன் வல்லவரே
இன்றும் என்றும் காப்பவரே
வல்லவர் சர்வ வல்லவர்
நல்லவர் என்றும் நல்லவர் – அல்லேலூயா

தீயின் நடுவே நடந்தாலும்
எரிந்து போகமாட்டோம்
கடலின் நடுவே நடந்தாலும்
மூழ்கிப் போகமாட்டோம்

சோதனை துன்பம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போவதில்லை
வேதனை வியாதி நெருங்கினாலும்
வெற்றி சிலுவையுண்டு

அலகை அனுநினம் சூதாக்கினாலும்
ஆண்டவர் வார்த்தையுண்டு
உலகம் நம்மை வெறுத்தாலும்
உன்னதர் கரங்களுண்டு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS