Engu Pokireer Iyaesu | எங்கு போகிறீர் இயேசு

எங்கு போகிறீர் இயேசு தெய்வமே
எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே

பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ
நீ சுமந்தது என் பாவச்சிலுவையோ
உம உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால் – எங்கு போகிறீர்

தீய சிந்தனை நாள் நினைத்ததால்
உன் சிரசில் முள்முடி நான் சூட்டினேன்

பெருமை கோபத்தால் உன் கன்னம் அறைந்தேனே
என் பொறாமை எரிச்சலால் உன்
விலாவைக் குத்தினேனே

கசையால் அடித்தது என் காம உணர்ச்சியால்
காரித் துப்பியது என்
பகைமை உணர்ச்சியால்

அசுத்த பேச்சுக்கள் நான் பேசி மகிழ்ந்ததால்
கசப்புக்காடியை நான்
குடிக்கக் கொடுத்தேனே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS