To Advertise Contact - christmusicindia@gmail.com

Ennai Aalum | என்னை ஆளும்

Loading

பல்லவி
என்னை ஆளும் இயேசு நாதா
எந்தன் ஆவி ஆத்மா சரீரம்
ஜீவபலியாய் ஒப்படைத்தேன்
ஜெயம் தந்தாட்கொள்ளும்

அதிகாலை தோறும் என்னை எழுப்பி
அறிவை ஊட்டி நிரப்புவீர்
இளைத்தவருக்கு ஏற்ற சமயம்
இனிய வாக்கை தந்தருளும் – என்னை

இருளின் அதிகாரத்தினின்றென்னை
அருள் ஒளியினுள் அழைத்தீரே
அன்புக் குமாரனின் இராஜ்ஜியமதில்
இன்பமுடனே பங்களித்தீர் – என்னை

எனது சுதந்திரம் பங்குமானீர்
எனது உள்ளம் பூரிக்குதே
ஆறுதல் தேறுதல் அல்லும் பகலும்
ஆலோசனைகளுமளித்தீர் – என்னை

எரியும் விளக்கில் எண்ணையும் ஊற்றும்
எரிந்து நானும் பிரகாசிப்பேன்
மலைமேல் பட்டணம் மறைந்திடுமோ
மங்கிடாதென்றும் உம் மகிமை – என்னை

நீரோடைகளை வாஞ்சிக்கும் மான்போல்
நித்தம் என் ஆத்மா கதறுதே
வறண்டு விடாய்த்த என் இதயத்தில்
வற்றாத ஊற்றாய்ப் பாய்ந்திடுவீர் – என்னை

சமாதானத்தின் தேவனே வருவீர்
சத்திய வாக்கு தவறிடீர்
விரைந்து பறந்து கர்த்தரை காண
விஸ்வாசத்தோடே தைரியம் கொள்வேன் – என்னை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS