To Advertise Contact - christmusicindia@gmail.com

Ennai Aatkonda Iyaesu | என்னை ஆட்கொண்ட இயேசு

Loading

என்னை  ஆட்கொண்ட  இயேசு
உம்மை யாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரே – என்றும்
நன்மைகள் செய்பவரே

மனிதர் தூற்றும் போது – உம்மில்
மகிழச் செய்பவரே
அதைத் தாங்கிடபெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே

தனிமை வாட்டும் போது – நல்
துணையாய் இருப்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே

வாழ்க்கை பயணத்திலே
மேகத்தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS