Ennai Azhaiththavar | என்னை அழைத்தவர்

என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
அன்பின் வாக்குத்தத்தங்கள் தந்தவர்
எந்தன் வழிகளில் என்னை காப்பவர்
என்றும் உன்னை நடத்திடுவார் (2)

தடைகள் உன் பாதையிலே
பெரும் துன்ப வேளைகளில் (2)
பதறாமல் இயேசுவை நம்பு (2)
புதுப்பாதை திறந்திடுவார்

நிறைவேற்றிடுவார் நாமத்தினால்
செய்ய முடியாதவைகள் ஒன்றுமில்லையே(2)
சிங்கக் கெபியிலும் அக்கினியிலும் (2)
அவர் சமூகம் உள்ளதினால்

கடல் அலைபோல் துயரங்கள் சூழ்ந்தாலும்
தீரா வியாதியினால் உடல் தளர்ந்தாலும் (2)
உந்தன் அருகில் இயேசு வருவார் (2)
விசுவாசத்தால் அவரைத்தேடு – என்னை

Close Menu
error: Content is protected !!