To Advertise Contact - christmusicindia@gmail.com

Ennai Maravathavarae – என்னை மறவாதவரே – Pastor David- Lyrics

Loading

என்னை மறவாதவரே என்னில் நினைவானவரே
உம்மை நான் நம்புவேனைய்யா நேசர் இயேசய்யா
உயிருள்ள நாளெல்லாம் நான் நம்புவேனைய்யா-2

தாயானவள் தன் பாலனை மறந்தாலும் நான் மறவேனே-2
உன்னை எந்தன் உள்ளங்கையில் வரைந்து வைத்தேனே
உன்னை மறவாமல் எந்நாளும் நினைத்திடுவேனே-2-என்னை மறவாதவரே

இமைப்பொழுது எந்தன் முகத்தை மறைத்தாலும் உனக்கு இரங்குவேன்-2
மலைகள் விலகி பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்
எந்தன் சமாதானம் உன்னைவிட்டு விலகிவிடாது-2-என்னை மறவாதவரே

உன் தாய் உன்னை தேற்றிடும் போல நான் உன்னை தேற்றிடுவேனே-2
தண்ணீரைக் கடக்கும்போதும் உன்னுடன் இருப்பேன்
அக்கினியில் நடக்கும்போதும் கூடவே நடப்பேன்-2-என்னை மறவாதவரே

error: Content is protected !!
ADS
ADS
ADS