Ennai Nirappum | என்னை நிரப்பும்

Loading

என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்

பேய்களை ஓட்டி நோய்களை போக்கும்
பெலனே வாருமே
பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும்
வல்லமையே வாருமே

தேற்றரவாளன் பரிசுத்த ஆவி
தேற்றிட வாருமே
ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்
ஆவியே வாருமே

வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்
வள்ளலே வாருமே
கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்
கருணையே வாருமே

கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்
சாந்தமே வாருமே
பாவங்கள் கழுவிப் பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS