Ennaith Thedi Iyaesu Vanthaar | என்னைத் தேடி இயேசு வந்தார்

என்னைத் தேடி இயேசு வந்தார்
எந்தன் வாழ்வை மாற்றிவிட்டார்
அல்லேலூயா நான் பாடுவேன்
ஆடிப்பாடித் துதித்திடுவேன்

மகனானேன் நான் மகளானேன்
அப்பா பிதாவே என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தார்

ஆவி தந்தார் தூய ஆவி தந்தார்
வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்ட
பரிசுத்த ஆவி தந்தார்

சுகமானேன் நான் சுகமானேன்
இயேசு கிறிஸ்துவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன்

தெரிந்து கொண்டார் என்னை தெரிந்து கொண்டார்
பரிசுத்தனும் புனிதனுமாய்
அவர் திருமுன் வாழ

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS