Enni Enni Thuthi | எண்ணி எண்ணி துதி

Loading

எண்ணி எண்ணி துதி செய்வாய்
எண்ணிலடங்காத கிருபைகட்காய்
என்றும் தாங்கும் தம்புயமே
இன்ப இயேசுவின் நாமமே

உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்னே பதறாதே
கண்மணிபோல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைப்பாரே – எண்ணி

யோர்தான் புரண்டு வரும்போல
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விசுவாச சோதனையில் – எண்ணி

உனக்கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே
உன்னை ஆசாஹித்தவர் உண்மை தேவன்
அவர் தாசருக்கு நீதியவர் – எண்ணி

திறந்தவாசல் முன்னே
தீவிரம் பிரவேசிப்போம்
ஒரு மனிதனும் பூட்டமாட்டான்
உன் கர்த்தர் முன் செல்வார் – எண்ணி

மனிதரை ஜனங்களை
மன்னவர் தருவாரே
நம் ஜீவனை ஈடாய் கொடுப்போம்
ஜீவன் தந்தவர் கேட்கிறாரே – எண்ணி

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS