Ennile Thaguthi Ondrum | என்னிலே தகுதி ஒன்றும்

Loading

என்னிலே தகுதி ஒன்றுமில்லையே
என் தேவன் முன்னாள் மேன்மை பாராட்ட

குயவனாம் தேவன் கையிலே
நான் வெறும் களிமண்தானே
வனைபவரும் வடிவமைப்பதும் தேவனே
என்னில் வாழ்வளித்து நடத்துவதும் தேவனே – என்னிலே

பாவியில் பிரதான பாவி நான்
என் நீதி அழுக்கான கந்தையே
கழுவிட்டார் தூய தம் இரத்தத்தால்
என்னை மீட்டிட்டார் அளவில்லாத கிருபையால் – என்னிலே

நடப்பதெல்லாம் உம்மையல்லாமல்
என்னாலேதும் நடக்கலாகுமோ
ஆகும் நீர் சொல்ல என்றுமே
கூடாதது உம்மால் ஒன்றும் இல்லையே – என்னிலே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS